அமெரிக்கா பனிப்புயல் - 1,600 விமான சேவை ரத்து

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களில் இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்களில் 12 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பனிப்புயல் காரணமாக 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 | 

அமெரிக்கா பனிப்புயல் - 1,600 விமான சேவை ரத்து

அமெரிக்காவில் வீசும் கடும் பனிப்புயல் காரணமாக இன்று 1,600 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் பனி சூழ்ந்து இருப்பதால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மத்திய மேற்கு மாநிலங்களில் இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்களில் 12 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்புயல் கடுமையாக தாக்கும் என்பதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1,600க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 770 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,15,000 விமானங்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP