ஈரான் புரட்சி காவல்படைக்கு நிதியளித்தவர்கள் மீது அமெரிக்கா தடை

ஈரானின் புரட்சி காவல்படைக்கு தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படும் 6 நபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
 | 

ஈரான் புரட்சி காவல்படைக்கு நிதியளித்தவர்கள் மீது அமெரிக்கா தடை

ஈரான் புரட்சி காவல்படைக்கு நிதியளித்தவர்கள் மீது அமெரிக்கா தடைஈரானின் புரட்சி காவல்படைக்கு தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படும் 6 நபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க கருவூல செயலரான ஸ்டீவன் மனுஷியன் கூறுகையில், "ஈரானின் புரட்சி காவல்படை என அழைக்கப்படும் ஐஆர்ஜிசி குழுவின் தவறான செயல்பாட்டுகளுக்கு உதவும் வகையில் பல மில்லியன் டாலர்களை அளித்துள்ளவர்கள் மீது புதிய தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். 

அமெரிக்க டாலர்களை பெறுவதற்கு ஐஆர்ஜிசி குழுவுக்கு உதவியதாக ஈரானின் மத்திய வங்கி மீதும் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டது. 

தற்போது, தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பெயர்களை அமெரிக்க கருவூலத்துறை வெளியிடவில்லை. ஆனால், தடைவிதிக்கப்பட்ட அனைவரும் ஈரானுக்கு தொடர்புடையவர்கள் என்று அந்தத் துறை கூறியுள்ளது.

இந்தத் தடை அமெரிக்காவும் ஐக்கிய அரபு எமிரகமும் இணைந்து விதிக்கும் தடை உத்தரவாகும். இந்த விதியின்படி, அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களோடு வணிகத் தொடர்பு மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாகும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP