அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ராஜினாமா..!

அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவிக்காலம் பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
 | 

அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ராஜினாமா..!

அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். 

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அதிபர் டிரம்புக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பதவி விலக இதுவே சரியான தருணம் என்றும், அதிபர் டிரம்ப் தகுதியான ஒரு தலைவரை ராணுவ அமைச்சராக நியமிப்பதற்கு ஏதுவாக அவர் பதவி விலகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய அமைச்சரை  தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறுநாளே, ராணுவ அமைச்சர் பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP