பின்லேடன் மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.7 கோடி பரிசுத்தொகை - அமெரிக்கா அறிவிப்பு

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் டாலர் பரிசளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7.08 லட்சம் கோடியாகும்.
 | 

முன்னதாக, கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்கப் படையினர் பின்லேடனை சுட்டுக் கொன்றனர் என்பது நினைவுகூரத்தக்க விஷயமாகும். அவரது மகன் ஹம்ஸா பின்லேடன் தற்போது அல்-கொய்தா இயக்கத்தின் தலைவராக உருவெடுத்து வருகிறார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஹம்ஸா பின்லேடன் தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது சிரியா என ஏதேனும் ஒருநாட்டில் வாழ்ந்து வருவதாகக் கருதப்படுகிறது. ஈரானில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு இருக்கிறார் என்று தகவல் அளிப்போருக்கு பரிசுத்தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தற்போது 30 வயதாகும் ஹம்ஸா லேடன், தனது தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP