இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்க ஐநா தூதர் நிக்கி ஹேலி ராஜினாமா!

அமெரிக்காவின் ஐநா தூதராக பணியாற்றி வந்த இந்திய பூர்வீகம் கொண்ட நிக்கி ஹேலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார்.
 | 

இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்க ஐநா தூதர் நிக்கி ஹேலி ராஜினாமா!

அமெரிக்காவின் ஐநா தூதராக பணியாற்றி வந்த இந்திய பூர்வீகம் கொண்ட நிக்கி ஹேலி,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். 

இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்கரான நிக்கி ஹேலி, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநராக பணியாற்றி வந்தார். 2016 அதிபர் தேர்தலில் அவர் நிற்கவுள்ளார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், தேர்தலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அதிபர் ட்ரம்ப்புக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஹேலி ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், ஐநா தூதர் பதவியில் ஹேலியை ட்ரம்ப் நியமித்தார். 

ஐநா தூதராக பல அதிரடி நடவடிக்கைகளை ஹேலி எடுத்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுத்து, வடகொரியாவை தனிமைபடுத்தி, பின்னர் பேச்சுவார்த்தைக்கு வரவைத்ததில் ஹேலிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், இவரது ஐநா பதவியில் சர்ச்சைகள் இல்லாமல் போகவில்லை. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்ற அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதற்கு ஹேலி ஆதரவு தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மற்ற ஐக்கிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

வெறும் 18 மாதங்கள் மட்டுமே இந்த பதவியில் அவர் இருந்துள்ளார். "ஆளுநர், ஐநா தூதர் உட்பட 8 ஆண்டுகள் பொதுசேவை செய்து வந்த நான், சிறிது காலம் இந்த அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க போகிறேன்" என்றார் ஹேலி. ஹேலி தனக்கு 'ஸ்பெஷல்' நண்பர் என்றும், வருங்காலத்தில் அவரை மீண்டும் தனது அரசில் பார்க்க விருப்பப்படுவதாகவும் அதிபர் ட்ர்மப் தெரிவித்தார். 

திடீரென ஹேலி ராஜினாமா செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வேறு பதவியில் அவரை அமர்த்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக ஒரு பக்கம் பேசப்படுகிறது. ஆனால், கடந்த வாரம், அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக சர்ச்சைக்குரிய பிரெட் காவனாக் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேலி ராஜினாமா செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நீதிபதி காவனாக்கிற்கு எதிராக பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP