அமெரிக்கா: யூத வழிப்பாட்டு தளத்தில் துப்பாக்கிச்சூடு-11 பேர் பலி

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ட்ரீ ஆஃப் லைஃப் என்ற யூத வழிபாட்டு மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
 | 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது.

வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட துவங்கினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் காயமடைந்த மர்ம நபர், போலீசாரிடம் சரணடைந்தார். 11 பேரை கொலை செய்தது, போலீசாரை துப்பாக்கியால் தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கூறுகையில், " இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயம மரண தண்டனை அளிக்கப்படவேண்டும்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP