எச்-1பி விசாவுக்கு கெடுபிடி காட்டும் அமெரிக்கா; சிக்கலில் இந்திய ஐ.டி. ஊழியர்கள்

அமெரிக்க அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதற்கு கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐடி நிறுவனங்கள், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 | 

எச்-1பி விசாவுக்கு கெடுபிடி காட்டும் அமெரிக்கா; சிக்கலில் இந்திய ஐ.டி. ஊழியர்கள்

எச்-1பி விசாவுக்கு கெடுபிடி காட்டும் அமெரிக்கா; சிக்கலில் இந்திய ஐ.டி. ஊழியர்கள்அமெரிக்க அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதற்கு கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் ஐ.டி நிறுவனங்கள், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்ற நடைமுறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அமெரிக்க தயாரிப்புகளுக்கு சலுகைகள் என பல அறிவிப்புகள் வெளியாகின.  இதனால்  வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது அந்நாட்டு அரசு. 

இந்நிலையில் எச்-1பி விசா வழக்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி அமெரிக்க அரசு நேற்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு பணியமர்த்தப்படும் ஊழியர்களின் கல்வி தகுதி, அவரது பணி விவரம், பணி சார்ந்த அவரது திறன் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

மேலும் மூன்றாவது நபரின் பணியிடங்களில் ஊழியர்கள் இணைவதாக இருந்தால் எச்-1பி விசா மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக, அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டும் வழங்கப்படும். பின்னர் ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து விசாவை புதுப்பிக்க வேண்டும்.

எச்-1பி விசாவுக்கு கெடுபிடி காட்டும் அமெரிக்கா; சிக்கலில் இந்திய ஐ.டி. ஊழியர்கள்

வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமெரிக்காவில் இந்த ஆண்டுக்காக விசா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய அதிரவைக்கும் உத்தரவு வெளிநாடுகளில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அத்துறை ஊழியர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். 

பல லட்சக்கணக்கானோர் ஆன் சைட் முறையில் பல்வேறு நாடுகளிலிருந்து சென்று அமெரிக்காவில் தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இவர்களுக்கு பணியாற்றவும் உயர் கல்வி கற்கவும் எச்1பி விசா வழங்கப்படுகிறது. அங்கு நிரந்தரமாக தங்க கிரின்கார்டு வாங்க வேண்டும். அதுவரை, இந்த விசாவை நீட்டித்து அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும்.

இந்தியாவில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் எச்1பி விசாவை பயன்படுத்தியே அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் தான் அமெரிக்காவில் நிரந்தரவாசியாக வழி செய்யும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், அதுவரை எச்1பி விசாவை நீட்டிப்புச் செய்யக் கூடிய வாய்ப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP