அமெரிக்கா: கலிபோர்னியாவை சுற்றி எரியும் காட்டுத் தீ; 25 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், 5 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்த நிலையில், அதில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
 | 

அமெரிக்கா: கலிபோர்னியாவை சுற்றி எரியும் காட்டுத் தீ; 25 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வரலாறு காணாத அளவு காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், அதில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 

அமெரிக்காவிலேயே மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவின் தலைநகர் சாக்ரமென்டோவின் வடக்கில், காட்டுத் தீ பற்றி எரிந்தது. அங்குள்ள கேம்ப் கிரீக் எனும் பகுதியில் கடந்த வியாழனன்று துவங்கிய இந்த காட்டுத் தீக்கு, 'கேம்ப் ஃபயர்' என பெயரிடப்பட்டது. இந்த கேம்ப் ஃபயர் தீயால், இதுவரை 23 பேர் இறந்துள்ளனர். வடக்கில் உள்ள பாரடைஸ் எனும் நகரம் இந்த காட்டுத் தீயால் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பகுதி, கேம்ப் ஃபயருக்கு இரையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 6500 வீடுகள் தீயில் எரிந்த நிலையில், மேலும், 15,000 வீடுகள் அதன் பாதையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுமார் 3,200 தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை, 20% தீயை மட்டுமே அணைக்க முடிந்த நிலையில், கேம்ப் ஃபயர் தீயை முற்றிலும் அணைக்க, இந்த மாதம் 30ம் தேதி வரை ஆகும் என கூறப்படுகிறது.

அதேபோல, அமெரிக்காவின் பிரபலங்கள் அதிகம் வாழும், கலிபோர்னியாவின் தெற்கு நகரமான மலிபூவில், மற்றொரு பெரும் காட்டுத் தீ பரவியது. அங்குள்ள மக்கள், வீடுகளை விட்டு வாகனங்களில் தீயில் இருந்து தப்ப முயற்சித்தனர். வாகன நெரிசல் ஏற்பட்டதில், அங்கிருந்த தப்ப முடியாமல், இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP