நிதி இன்றி தவிக்கும் ஐ.நா.- சபை - 'காரணம் அமெரிக்கா தான்!’ 

ஐ.நா. சபையின் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாடுகள் சரிவர நிதி வழங்காததால், கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட 81 நாடுகள் நிதி வழங்காததையும் ஐ.நா. தலைவர் அண்டானியோ குட்ரஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.
 | 

நிதி இன்றி தவிக்கும் ஐ.நா.- சபை - 'காரணம் அமெரிக்கா தான்!’ 

ஐ.நா. சபையின் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாடுகள் சரிவர நிதி வழங்காததால், கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட 81 நாடுகள் நிதி வழங்காததையும் ஐ.நா. தலைவர் அண்டானியோ குட்ரஸ் சுட்டிக் காட்டியுள்ளார். 

ஐ.நா. சபையில் மொத்தம் 193 நாடுகளை உறுப்பினர்களாக உள்ளனர். இதன் நடப்பாண்டு பட்ஜெட் ரூ.3,700 கோடி. இந்த பட்ஜெட் நிதியை உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களுடைய பொருளாதார பலத்துக்கு ஏற்ப கொடுத்து வருகின்றன. இதில், அமெரிக்காதான் ஆண்டுதோறும் அதிகபடியான அதாவது 22 சதவிகிதம் நிதி வழங்கி வருகிறது. ஐநா.வின் நிர்வாகப் பணிகள், மாநாடுகள், சர்வதேச அமைதிப்படைகள் உட்பட பல்வேறு வகைகளில் இந்த நிதியை ஐ.நா. செலவு செய்து வருகிறது.

இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் ஐ.நா. சபை செலவுக்கு பணமில்லாமல் திண்டாடி வருகிறது. இது பற்றி ஐ.நா.  பொதுச் செயலாளர் ஆன்டானியோ குட்ரஸ் கடிதம் ஒன்றில் குறிப்பிடுகையில், "நாம் இதற்கு முன்பு அனுபவப்படாத வகையில், தற்பொழுது நிதிப் பற்றாக்குறை உள்ளது. உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்பை செலுத்த தாமதப்படுத்தியதால், இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதே நிலைமை நீடித்தால், ஐ.நாவில் செலவுக்கு பணமே இல்லாமல் போய்விடும். ஐ.நா.வின் நிலை குறித்து உறுப்பு நாடுகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையால், சபையின் மதிப்பு சீர்குலையும் அபாயம் உள்ளது எனவும் உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

81 நாடுகள் நிதி வழங்கவில்லை

உறுப்பு நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 112 உறுப்பினர் நாடுகள், தங்களுடைய வழக்கமான பட்ஜெட்டை செலுத்தியுள்ளன. இந்தியாவின் சார்பாக கடந்த ஜனவரி 29ம் தேதி 17.91 மில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளது. ஈராக், மால்டோவா, ஜப்பான் மற்றும் மெக்சிகோ நாடுகளும் தங்களின் முழு பங்களிப்பையும் செலுத்தியுள்ளன. 

ஆனால், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரேசில், எகிப்து, இஸ்ரேல், பாகிஸ்தான் என 81 நாடுகள் இந்த ஆண்டிற்கான தங்களின் பங்களிப்பை  செலுத்தவில்லை எனவும் ஆண்டானியொ குட்ரஸ் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடிக்கும் நாடு அமெரிக்கா.  ஐ.நா. சபை இயங்க தேவையான வருடாந்திர வரவு செலவு தொகையான சுமார் 5.4 பில்லியன் கோடி டாலர்களில் 22 சதவிகிதத்தை அமெரிக்கா ஏற்றுள்ளது. மேலும், 7.9 பில்லியன் டாலர்களில் 28.5 சதவிகிதம் தொகையை அமெரிக்கா தனது பங்களிப்பாக ஒப்புக்கொண்டு அளித்து வந்தது. ஆனால் சமீப காலமாக ஐ.நா. உடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP