அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு இஸ்லாமிய பெண்கள்!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இடைக்கால தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அந்நாட்டு சரித்திரத்திலேயே முதல்முறையாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 | 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு இஸ்லாமிய பெண்கள்!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இடைக்கால தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அந்நாட்டு சரித்திரத்திலேயே முதல்முறையாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றதிற்கான இடைக்கால தேர்தல் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற கீழ் சபை, செனட் சபை மற்றும் மாகாண ஆளுநர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பிறகு அங்கு நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், இதன் மீது உலக நாடுகளின் கண்கள் இருந்தன. குடியேறிகளை தடுப்பதே தனது முதல் நோக்கம் என பிரச்சாரம் செய்து வந்த அதிபர் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி, நாடாளுமன்ற கீழ்சபையில் இருந்த தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவுக்கு குடியேறிய இஸ்லாமிய பெண் ஒருவரும், குடியேறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவரும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களாக நாடாளுமன்ற கீழ் சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் முதல் இஸ்லாமிய பெண்கள் இவர்களே. 

37 வயதான இல்ஹான் ஒமார், 8 வயதாக இருந்தபோது சோமாலியா நாட்டில் இருந்து குடும்பத்துடன் அகதியாக அமெரிக்காவுக்கு வந்தவராவார். மின்னியாபோலிஸ் தொகுதியில் நின்று, நாடாளுன்ற கீழ்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அதேபோல, 42 வயதான ரஷிதா த்லைப்,  பாலஸ்தீனத்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்தவராவார். டெட்ராயிட் தொகுதியில் நின்ற த்லைப், தன்னை எதித்து போட்டியிட எதிர்க்கட்சி வேட்பாளர் யாரும் இல்லாததால் அபார  வெற்றி பெற்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP