வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் விருப்பம்!

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் விருப்பம்!
 | 

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் விருப்பம்!


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சுமார் ஒரு வருடமாக தொடர்ந்து வடகொரியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். 

வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்து வரும் கிம் ஜாங் ஊன், அணு ஆயுத சோதனைகளையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சோதனைகளால் உலக நாடுகளின் கண்டனங்களை பெற்றதோடு, பல பொருளாதார தடைகளுக்கும் வடகொரியா ஆளாகியுள்ளது. 

ஏற்கனவே அமெரிக்காவை தனது பரம எதிரியாக கருதிவரும் வடகொரியா, அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வேண்டும் என முனைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பாணியில் தொடர்ந்து ட்விட்டரிலும் அந்நாட்டை விமர்சித்து வருகிறார்.

கிம் ஜாங் ஊனை 'ராக்கெட் மேன்' என்று விமர்சித்ததோடு, அவரை விட பெரிய அணு ஆயுதம் என்னிடம் உள்ளது என்றும் கூறி வந்தார். 

சமீபத்தில் தென்கொரியாவுடன் வடகொரியா சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக விருப்பம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வடகொரியாவுடன் தான் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ள காரணத்தால்தான், அந்நாடு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது என டிரம்ப் ட்விட்டரில் கூறிக் கொண்டார்.

இன்று செய்தியாளர்கள் டிரம்ப்பிடம் நீங்கள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்களா என கேட்டபோது, "நிச்சயமாக. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைத்தால் எனக்கு விருப்பம் தான்" என்றார் டிரம்ப்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP