வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மனைவியின் நிலை: வருந்தும் பிரிஜிட் மாக்ரோன்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே செல்ல முடியாமல் கூண்டில் அடைப்பட்டது போல இருக்கிறார் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட் கூறியுள்ளார்.
 | 

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மனைவியின் நிலை: வருந்தும் பிரிஜிட் மாக்ரோன்

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மனைவியின் நிலை: வருந்தும் பிரிஜிட் மாக்ரோன்அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே செல்ல முடியாமல் கூண்டில் அடைப்பட்டது போல இருக்கிறார் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனின் மனைவி பிரிஜிட் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். 3 நாள் அரசு முறை பயணமாக தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றிருந்த மாக்ரோன், 25ம் தேி பிரான்ஸ் புறப்பட்டார்.
பிரான்ஸ் சென்றதும் எம்மானுவெலின் மனைவி அமெரிக்க பயணம் குறித்து பேட்டியளித்தார். அதில், "மெலானியா ட்ரம்புடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வு. இருவரும் பேசும் போது நிறைய சிரித்தோம்.
ஆனால் மெலானியா கடுமையான பாதுகாப்புகளுக்கு நடுவே வாழ்கிறார். அவரை சுற்றி கண்காணிப்புக்கு ஆட்கள் இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவரால் அங்கு எதையும் செய்ய முடியவில்லை. வெள்ளை மாளிகையில் இருந்து அவரால் வெளியே கூட வர முடியாது. ஜன்னலை கூட அவர் திறந்து பார்க்க அனுமதி இல்லை. நான் பாரிசில் தினமும் வெளியே வருகிறேன். மெலானியா தன்னை முழுமையாக வெளிப்படுத்தக்கூட முடியாத நிலையில் வாழ்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP