ரெண்டு நாள் தாக்குபிடிக்க மாட்டீர்கள்: சவூதி அரசருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இரண்டு நாட்கள் கூட தாக்குப்பிடிக்க மாட்டீர்கள் என சவூதி அரசர் சல்மானிடம் எச்சரித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 | 

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தனது வித்தியாசமான போக்காலும், சர்ச்சைக்குரிய பேச்சுக்களாலும் தினசரி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னை சில மாதங்களுக்கு முன் 'குண்டு பையன்', 'சின்ன பையன்' என்றெல்லாம் விமர்சித்த ட்ரம்ப், சமீபத்தில், அவருடன் காதலில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

அமெரிக்காவின் நட்பு நாடுகளான கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றின் தலைவர்களுடன் சர்சைக்குரிய போக்கை கடைபிடித்து வரும் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிம் ஜோங் உன் ஆகியோரிடம் நட்பு பாராட்டி வருகிறார். இது வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய கூட்டணியான நேட்டோவுக்கு அமெரிக்கா அதிக அளவில் பணம் செலவழிப்பதாக கூறி வந்த ட்ரம்ப், அதற்கான நிதியை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். 

அதேபோல, தற்போது சவூதி அரசர் சல்மானிடமும், அமெரிக்காவின் ராணுவ பங்களிப்புக்கு போதிய நிதியை வழங்க வேண்டும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஒரு மாநாட்டில் பேசிய ட்ரம்ப், "சவூதிக்கு நாம் தான் பாதுகாப்பு வழங்குகிறோம். சவூதி பணக்கார நாடு தானே? அரசர் சல்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் பேசினேன். அப்போது, நாங்கள் தான் உங்களை பாதுகாத்து வருகிறோம். நாங்கள் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட தாக்குப்பிடிக்க மாட்டீர்கள். ராணுவத்திற்கு நீங்கள் பங்களித்த ஆக வேண்டும்" என்றார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP