'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை 

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மரணத்துக்கு சவுதி அரசு தான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா அந்நாட்டு அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை 

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மரணத்துக்கு சவுதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா அந்நாட்டு அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ''அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஆசைப்படுவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் தண்டனை கடுமையானதாக தான் இருக்க வேண்டும்" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இதில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நா., பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி  மாயமானது குறித்த உண்மையை சவுதி கூறியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

சவுதி மாநாடு புறக்கணிக்கப்படுகிறதா? 

கஷோகிஜி மாயமானதும் சவுதிக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களுக்கும் கவலை தெரிவித்து சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் ஊடக குழுக்கள் சவுதி தலைநகர் ரியாதில் இம்மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என முடிவெடுத்துள்ளன. 

அமெரிக்க அரசின் கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷ், மற்றும் பிரிட்டனின் சர்வதேச வர்த்தகச் செயலர் லியம் ஃபாக்ஸ் இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த மாநாடு சவுதி இளவரசர் சல்மானின் சுய ஆட்சியை கவுரவப்படுத்தவும் முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தோடும் நடத்தப்படுகிறது. இதில் சவுதியின் கூட்டு நாடுகள் பங்கேற்காமல் போனால் பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இந்த மாயமான பத்திரிகையாளர்? 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP