ட்ரம்ப்பின் எல்லை சுவர் பணிகள் துவங்க பல மாதங்கள் ஆகும்: பென்டகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்காக, தேசிய அளவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய நிலையில், அதன் கட்டுமானப் பணிகள் துவங்கி பல மாதங்கள் ஆகும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
 | 

அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய எல்லை சுவர் கட்டும் திட்டத்திற்கு, அந்நாட்டின் நாடாளுமன்றம் நிதி ஒதுக்காததை தொடர்ந்து, அவர் கடும் பின்னடைவை சந்தித்தார். அதன்பின், வேறு வழி இல்லாமல், தேச பாதுகாப்பிற்காக அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாகவும், தெரிவித்தார். அவசர காலத்திற்கு, தேவைப்படும் நிதியை பயன்படுத்தி, எல்லை சுவர் கட்ட அவர் திட்டமிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாகாண அரசுகள், அதிபரின் அவசர நிலையே போலியானது, என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள், அதிபருக்கு எதிராக தீர்ப்பளித்து எல்லை சுவர் கட்ட தடை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன், இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "எந்த தடைகளும் இல்லாவிட்டாலும்கூட, சுவர் கட்டும் பணிகளை துவங்க பல மாதங்கள் ஆகும்" என தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்ற துறைகளுக்கான நிதியை, சுவருக்காக பயன்படுத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், தக்க நேரத்தில் அதற்கான போதிய நிதி கிடைக்கவும் வாய்ப்புகள் கம்மி, என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் ஒரு திட்டத்திற்காக, அவசர நிலையை ட்ரம்ப் பயன்படுத்தியது, மேலும் அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP