"சுவர் கட்டலைன்னா, அரசை இழுத்து மூடிடுவேன்" அடம்பிடிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது முக்கிய வாக்குறுதியான, மெக்சிகோ -அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்காவிட்டால், அரசு இழுத்து மூடப்படும் என எச்சரித்துள்ளார்.
 | 

"சுவர் கட்டலைன்னா, அரசை இழுத்து மூடிடுவேன்" அடம்பிடிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது முக்கிய வாக்குறுதியான, மெக்சிகோ -அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்காவிட்டால், அரசு இழுத்து மூடப்படும் என எச்சரித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் நின்றபோது, ட்ரம்ப் கூறிய பல்வேறு சர்ச்சைக்குரிய வாக்குறுதிகளில் முக்கியமானது, அமெரிக்க - மெக்சிகோ எல்லையில், மெகா சுவர் ஒன்றை எழுப்புவது. மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஆயிரக்கணக்கானோர் குடியேறி வருவதால், அவர்களை தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என ட்ரம்ப் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை சுமார் 3200 கிமீ தூரமாகும். அவ்வளவு பெரிய சுவரை எழுப்பினால், அதற்கு பல லட்சம் கோடி செலவாகும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ஆனால்,  அந்த சுவரை கட்ட, மெக்சிகோவையே நிதி தர வைப்பேன் என ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்பின் திட்டம் முட்டாள்தனமானது என பல நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துவிட்டனர். அவ்வளவு பெரிய சுவர் கட்டினாலும், அதை ஏணி வைத்து தாண்டி மக்கள் வரத்தான் செய்வார்கள், என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. தேர்தலின் போது,மெக்சிகோவை நிதி ஒதுக்க வைப்பேன் என கூறிய ட்ரம்ப், தற்போது அமெரிக்க வரிப்பணத்தில் இருந்து சுவர் எழுப்ப வேண்டும் என கூறி வருகிறார். 

மெக்சிகோ தரப்பில் ட்ரம்பின் திட்டத்திற்கு ஒரு காசு கூட கொடுக்க மாட்டோம் என கூறிய நிலையில், ட்ரம்ப் தற்போது அமெரிக்க பட்ஜெட்டில் இருந்து சுவருக்கு நிதி ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால்,  அவரது கட்சியினரே, சுவருக்கான நிதியை ஒதுக்குவதற்கு ஆதரவு தர மறுக்கிறார்கள். இந்நிலையில், அடுத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்காவிட்டால், பட்ஜெட் தாக்கல் செய்வது நிறுத்தப்பட்டு, அனைத்து அரசு சேவைகளும் மூடப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

ஆனால், வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசு மூடப்பட்டால், அது ஆளும் குடியரசு கட்சிக்கு கடும் பின்னடைவை தரும். இதனால், "ட்ரம்ப் சமரசம் செய்வார்", "அரசு தொடர்ந்து செயல்படும்" என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP