METOO இயக்கத்தை மீண்டும் சீண்டாமல் சீண்டிய ட்ரம்ப்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்பங்களை வெளியே கூறி வர பயன்படுத்தப்பட்டு வரும் METOO என்ற ஹெஷ்டேக் இயக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் வம்பிழுத்துள்ளார். ட்ரம்பின் பேச்சுக்கு சர்ச்சை கிளம்பியுள்ளது.
 | 

METOO இயக்கத்தை மீண்டும் சீண்டாமல் சீண்டிய ட்ரம்ப்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்பங்களை வெளியே கூறி வர பயன்படுத்தப்பட்டு வரும் METOO என்ற ஹெஷ்டேக் இயக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் வம்பிழுத்துள்ளார். 

பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்களும் தங்கள் வாழ்நாளில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுகளை பெரிதாக வெளிப்படுத்த இயலாத சூழல் இருந்த நிலையில், ஹாலிவுட் பெண் பிரபலங்கள் METOO என்ற ஹெஷ்டேக் தொடங்கி அதில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர். சிலர் தன்னை தொந்தரவு செய்த நபரையே நேரடியாக அம்பலப்படுத்தியும் உள்ளனர். 

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் வைன்ஸ்டைன் படுக்கைக்கு அழைத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் பல நடிகைகள் கடந்த ஆண்டு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தினம் தினம் அவர் குறித்த பாலியல் புகார்கள் வெளிவந்து கொண்டிருருக்கின்றன. ஏஞ்செலீனா ஜூலி,  சல்மா ஹேயக், 'அயர்ன் மேன்' நடிகை க்வெனெத் பால்ட்ரோ உள்ளிட்ட 60 பெண்கள், தங்களிடமும் வைன்ஸ்டைன் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தனர். இது தான் முதலில் இந்த இயக்கம் பூதாகரமாக உருவாகக் காரணம். 

இந்த இயக்கம் அமெரிக்க வெள்ளை மாளிகையையும் அசைத்துப் பார்த்தது. அதிபர் ட்ரம்ப் அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைத்த பிரெட் கவனாக் மீதும் 2 பெண்கள் புகார் கூறினார். ஆனால் இந்த விவகாரம் நிரூபிக்கப்படாமல் போனதை அடுத்து அவரது நியமனத்துக்கு செனட் ஒப்புதல் அளித்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் பதவி ஏற்றுக் கொண்டு விட்டார். 

இந்த விவகாரத்தின்போதே #METOO இயக்கத்தை சீண்டிய ட்ரம்ப், ''சம காலத்தில் இளம் ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லை'' என சீண்டினார்.

இந்த நிலையில் மீண்டும் அவ்வாறு பேசியுள்ளார். அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட ட்ரம்ப், ''பென்சில்வேனியாவில் குடியரசுக் கட்சியினர் நீண்ட காலமாக வெற்றி பெறவில்லை. ஆனால் ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் தாங்கள் வெல்லப் போவதாகவே ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வார்கள். அப்படி தான் பேசுவார்கள். இதை எளிமையாக கூற ஒரு சொற்றொடர் "the girl that got away (நம் அன்பானவர்கள் பிரிந்து செல்வது). 

ஆனால் இதைக் கூட நான் நேரடியாக கொள்ள முடியாது. METOO இயக்க விதிகளின் காரணமாக அதை நான் சொல்ல மாட்டேன். நானே எனக்கு சென்சார் செய்துகொள்கிறேன். சொன்னால் ட்ரம்ப் சொன்னதைக் கேட்டீர்களா, அவர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? என பத்திரிகைக்காரர்கள் வரிசை கட்ட ஆரம்பிப்பார்கள்.  அதனால் இதனை நான், ''the person that got away'' என்று சொல்கிறேன்'' என்றார் ட்ரம்ப்.

பெண் (கேர்ள்) என்று சொன்னாலே METOO இயக்கத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்க கிளம்புவார்கள் எனக் கூறி ட்ரம்ப் இந்த இயக்கத்தை சீண்டியுள்ளார். ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு சர்ச்சை கிளம்பியுள்ளது. 

தொடர்புடையவை: 

21 வயதில் பலத்காரம்... ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

பாலியல் பலாத்கார விசாரணை வலையில் சில்வஸ்டர் ஸ்டாலன்

60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP