ஆப்பிள் நிறுவன தலைவரை 'டிம் ஆப்பிள்' என்று அறிமுகப்படுத்திய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர்களுடனான சந்திப்பில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்-கை, 'டிம் ஆப்பிள்' என அறிமுகப்படுத்தியது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
 | 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைத்தளங்களிலும், மேடை பேச்சுகளிலும் பல விஷயங்களை தவறாக பேசி அடிக்கடி மாட்டிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அதுபோல, சமீபத்தில் நடைபெற்ற தொழிலதிபர்களுடனான சந்திப்பில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்கை பற்றி ட்ரம்ப் பாராட்டி பேசி வந்தார். அப்போது அவர், "டிம் ஆப்பிளுக்கு நன்றி" என்று கூறினார்.

இது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விமர்சிக்கப்பட்டு கிண்டலடிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்ரம்ப், நேரத்தை மிச்சம் செய்யவே தான் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் என்று கூறுவதற்கு பதிலாக டிம் ஆப்பிள் என்று கூறியதாக ட்ரம்ப் ட்விட்டரில் எழுதியுள்ளார். 

ஆனால், இந்த விளக்கத்தை பலரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் கூட, ட்விட்டரில் தனது பெயரில் டிம்முடன் ஆப்பிள் எமோஜியை சேர்த்துக் கொண்டுள்ளார்.  

அவரது விளக்கம் ஏற்றுக்கொள்வது போல உள்ளதா? கீழே உள்ள வீடியோவை பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்....

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP