புடின் நண்பருக்கு உதவிய ட்ரம்ப்; எதிர்க்கட்சிகள் காட்டம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒலெக் டெரபாஸ்காவுக்கு தொடர்புடைய 3 நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ட்ரம்ப் அரசு அதிரடியாக நீக்கி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 | 

புடின் நண்பருக்கு உதவிய ட்ரம்ப்; எதிர்க்கட்சிகள் காட்டம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒலெக் டெரபாஸ்காவுக்கு தொடர்புடைய 3 நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ட்ரம்ப் அரசு அதிரடியாக நீக்கி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ரஷ்ய தொழிலதிபர் ஒலெக் டெரபாஸ்கா, அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர். அந்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான டெரபாஸ்கா, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற உதவியதாக கூறப்படுகிறது. டெரபாஸ்கா மீதும், அவரது நிறுவனங்கள் மீதும் ஏற்கனவே தடை உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் கிரைமியா பகுதியை ரஷ்யா கைப்பற்றியதற்கு பதிலடி கொடுக்குமாறு அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்த வரிசையில், டெரபாஸ்காவுக்கு நெருக்கமான 3 நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு தடை விதித்தது. இந்த முடிவு, புடினை நேரடியாக பாதிக்கும் என அமெரிக்க அரசு சார்பில் கூறப்பட்டது.

ட்ரம்ப்பின் அதிபர்  தேர்தல் பிரச்சாரக் குழுவில் உள்ள பல்வேறு உறுப்பினர்களுக்கும், டெரபாஸ்காவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக, தேர்தல் மோசடி குறித்து விசாரித்து வரும் சிறப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. டெரபாஸ்கா மூலம், நிதியை பெற்று அதன் மூலம், அமெரிக்க தேர்தலில் பல்வேறு குளறுபடிகளை செய்ய ரஷ்ய அரசு திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது நிறுவனங்கள் மீதுள்ள தடையை நீக்க ட்ரம்ப் முடிவெடுத்தது, எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க கருவூலத்துறை, டெரபாஸ்காவுக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியுள்ளது. இந்த ,நிறுவனங்களில் அவரது பங்கு கணிசமாக குறைந்துள்ளதாகவும், அதனாலேயே இந்த நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தெரிவித்தது. ஆனால், ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மற்றும் அமெரிக்க எதிர்க்கட்சியினர், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை, புட்டினுக்கு கிடைத்துள்ள ஒரு பெரிய அன்பளிப்பு, என விமர்சித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP