பாகிஸ்தானை தொடர்ந்து பாலஸ்தீனை எச்சரிக்கும் டிரம்ப்

பாலஸ்தீன் நாட்டிற்கு அளித்து வரும் நிதியை நிறுத்தி விட போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
 | 

பாகிஸ்தானை தொடர்ந்து பாலஸ்தீனை எச்சரிக்கும் டிரம்ப்

பாலஸ்தீன் நாட்டிற்கு அளித்து வரும் நிதியை நிறுத்தி விட போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு ராணுவத்திற்கு அளித்து வந்த 1,624 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி உத்தரவிட்டார். உலக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானை தொடர்ந்து தற்போது பாலஸ்தீனம் மீதும் இது போன்ற நடவடிக்கை எடுக்க போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று டிரம்ப், "பாகிஸ்தான் மட்டுமல்ல பல நாடுகளுக்கு நாங்கள் நிதி அளித்து வருகிறோம். உதாரணத்திற்கு, பாலஸ்தீன் நாட்டிற்கு ஆண்டு தோறும் கோடி கணக்கில் நிதி அளித்து வருகிறோம். ஆனால் அதற்கான மரியாதை எங்களுக்கு கிடைப்பதில்லை. நீண்ட நாளாக கிடப்பில் இருக்கும் இஸ்ரல் உடனான அமைதி உடன்படிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்த அவர்கள் தயாராக இல்லை. இந்த பேச்சுவார்த்தையின் மிக சிக்கலான பகுதியாக கருதப்பட்ட ஜெருசலேம் விவாகரத்தில் இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் பாலஸ்தீனியர்கள் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை. அப்படி இருக்கையில் அவர்களுக்கு ஏன் நாம் இவ்வளவு நிதியை அளிக்க வேண்டும்?" என பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான பிரச்னையில் நீண்ட காலமாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வருகிறது. இது வரை அமெரிக்க அதிபர்களாக இருந்த யாரும் எடுக்காத ஒரு முடிவை கடந்த மாதம் எடுத்து டிரம்ப் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். சர்ச்சைக்குரிய ஜெருசலேம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பாலஸ்தீன் மட்டுமின்றி, இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அமெரிக்காவின் முடிவு தொடர்பாக ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP