அகதிகளை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன்: ட்ரம்ப் சபதம்

மத்திய அமெரிக்காவில் இருந்து கேரவேனில் அமெரிக்காவை நோக்கி வரும் அகதிகள் விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்து என பேசி வந்த ட்ரம்ப், அவர்களை நிச்சயம் நாட்டுக்குள் விடமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
 | 

அகதிகளை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன்: ட்ரம்ப் சபதம்

மத்திய அமெரிக்காவில் இருந்து கேரவேனில் அமெரிக்காவை நோக்கி வரும் அகதிகள் விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்து என பேசி வந்த ட்ரம்ப், அவர்களை நிச்சயம் நாட்டுக்குள் விடமாட்டேன் என உறுதியளித்துள்ளார். 

ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவை நோக்கி சில தினங்களுக்கு முன் கேரவேன்களில் புறப்பட்டனர். போதைப்பொருள் கும்பல்களால் அந்நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பெண்கள் குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அந்த கேரவேன்களில் சமூக விரோதிகளும் போதைப்பொருள் கும்பல்களும் வருவாதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். குடியேற்றத்தை குறைக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அகதிகள் வருகையை தடுக்கவும் வலியுறுத்தினார். ஆனால், ட்ரம்ப் கூறுவது போல, அகதிகள் மத்தியில் சமூக விரோதிகள் இருப்பதாக அமெரிக்க அரசோ, ராணுவமோ, மெக்சிகோ அரசோ எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது ஒரு தேச பாதுகாப்பு விவகாரம் என ட்ரம்ப் தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தில், இந்த விவாகரத்தை வைத்து ட்ர்மப் அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ள ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தில், தனது குடியரசு கட்சி வேட்பாளரை ஆதரித்து ட்ரம்ப் பேசினார். அப்போது, 'மோசமானவர்கள்' அந்த கேரவேன்களில் வருவதாகவும், அவர்களை நாட்டுக்குள் விடமாட்டேன் என்றும் கூறினார். 

மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அமெரிக்காவுக்குள் கட்டுப்பாடின்றி மற்ற நாட்டவர்களை குடியேற விட ஆதரவு முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP