அடம்பிடிக்கும் ட்ரம்ப்; சமாதானப்படுத்த முயற்சிக்கும் பிரான்ஸ் அதிபர்!

சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தோடு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார்.
 | 

அடம்பிடிக்கும் ட்ரம்ப்; சமாதானப்படுத்த முயற்சிக்கும் பிரான்ஸ் அதிபர்!

அடம்பிடிக்கும் ட்ரம்ப்; சமாதானப்படுத்த முயற்சிக்கும் பிரான்ஸ் அதிபர்!

சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தோடு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். 

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம், ஈரான் அணுஆயுத ஒப்பந்தம், சிரியா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வரும் மே மாதம் 12ம் தேதியோடு ஈரான் ஒப்பநதம் முடிவடைகிறது. ஆனால், அதை புதுப்பிக்க, ட்ரம்ப் மறுத்து வருகிறார். முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் முடிக்கப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரானுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார் ட்ரம்ப்.

அந்த ஒப்பந்தத்தை அடைய, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து பெரும்பாடு பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, ட்ரம்ப்பின் அதிரடி முடிவு, மிகவும் ஆபத்தானது என உலக தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க முடியாது என நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அந்த முடிவும் ஆபத்தானது, என மேக்ரான் கருதுவதால், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சங்களாக இவை அமையும் என தெரிகிறது. 

அதிபர் மேக்ரான் மற்றும் அவரது மனைவி ப்ரிஜிட், முதலில், வாஷிங்டனில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். அதன்பின், வெள்ளை மாளிகைக்கு சென்ற அவர்களை ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா வரவேற்றனர். முதலாம் உலகப்போரின் போது, பிரான்சில் பலியான 9000 அமெரிக்க வீரர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்று ஒன்றை, வெள்ளை மாளிகையில் இரு அதிபர்களும் சேர்ந்து நட்டனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP