'நண்பனிடம் என் அன்பை கூறுங்கள்'- சுஷ்மாவிடம் தூது சொன்ன ட்ரம்ப்

ஐ.நா. தலைமையக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருக்கும் சுஷ்மா ஸ்வராஜிடம் பிரதமர் மோடியிடம் தனது அன்பை தெரிவிக்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

'நண்பனிடம் என் அன்பை கூறுங்கள்'- சுஷ்மாவிடம் தூது சொன்ன ட்ரம்ப்

ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருக்கும் சுஷ்மா ஸ்வராஜிடம் பிரதமர் மோடியிடம் தனது அன்பை தெரிவிக்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா சபையின் 73வது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். 

இந்த நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு ட்ரம்ப் தலைமையில் நடந்தது. இந்த கூட்ட முடிவில் ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சுஷ்மா ஸ்வராஜை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.  அதன்பின் ட்ரம்பிடம் சுஷ்மாவை அறிமுகப்படுத்தினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து உங்களுகான அன்பை பெற்று வந்துள்ளேன் என சுஷ்மா ட்ரம்பிடம் கூறினார்.  இதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கூறிய ட்ரம்ப், ''நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள்'' என கூறினார். 

மண்டேலாவுக்கு பாரத் ரத்னா

பின்னர் நடந்த நெல்சன் மண்டேலா அமைதி உச்சி மாநாட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே உள்ள நெருங்கிய பாரம்பரிய தொடர்பு குறித்து சுஷ்மா பேசினார். அப்போது, மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்ததை நினைவு கூர்ந்தார். ''மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் அமைதி வழியில் விடுதலைக்காக போராடினர். ஆனால் சமீப காலங்களாக பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இதை ஒடுக்குவதில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச தலைவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரான கைகோர்த்து செயல்பட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP