பிரான்ஸ் அதிபர் கோட்டில் இருந்த 'பொடுகை' தட்டிவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இடையே உள்ள நட்பை காட்டுவதற்காக இம்மானுவேல் கோர்ட்டில் இருந்து பொடுகை தட்டிவிட்டார் விமர்சனத்துக்குள்ளானது.
 | 

பிரான்ஸ் அதிபர் கோட்டில் இருந்த 'பொடுகை' தட்டிவிட்ட ட்ரம்ப்

பிரான்ஸ் அதிபர் கோட்டில் இருந்த 'பொடுகை' தட்டிவிட்ட ட்ரம்ப்அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இடையே உள்ள நட்பை காட்டுவதற்காக இம்மானுவேல் கோட்டில் இருந்து பொடுகை தட்டிவிட்டார். இந்த செயலை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது மனைவியுடன் அமெரிக்காவிற்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

நேற்று இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பினைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 'எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். அது உண்மை தான். எந்த அளவுக்கு என்றால் அவர் கோட்டில் இருக்கும் பொடுகை கூட நான் தட்டி விடுகிறேன். அவரை சரியான மனிதராக மாற்ற வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டு இம்மானுவேல் சிரித்தார். ஆனால் ட்ராம்பின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP