மெக்ஸிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்தும் ட்ரம்ப்

மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க ராணுவ வீரர்களை குவிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
 | 

மெக்ஸிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்தும் ட்ரம்ப்

மெக்ஸிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்தும் ட்ரம்ப்மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க ராணுவ வீரர்களை குவிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்காவின் மேற்கில் இருந்து கிழக்கு வரை கலிபோர்னியா, அரிசோனா, டெக்சாஸ், சோனோரா, உள்ளிட்ட மாகாணங்கள் மெக்ஸிகோ எல்லை பகுதியையொட்டி உள்ளது.  இந்த எல்லை சுமார் 3,145 கி.மீ. நீளம் கொண்டது. மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்கவும், போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால் இந்த எல்லையோரப் பகுதியில் நீண்ட சுவர் எழுப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். தற்போது மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் அங்கு ராணுவ வீரர்களையும் காவல் பணியில் குவிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அமெரிக்க உள்துறை பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்ஜென் நீல்சன் கூறுகையில், மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றம், போதை பொருட்கள் கடத்தல், சமூகவிரோத செயல்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதன்காரணமாக அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு படை வீரர்களை மெக்ஸிகோ எல்லையில் பணியமர்த்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார். 

அதிபர் உத்தரவை எல்லையோர மாகாணங்களான டெக்சாஸ், அரிசோனா, நியூ மெக்ஸிகோ ஆளுநர்கள் வரவேற்றுள்ளனர். அரிசோனா ஆளுநர் டக் டியூசி கூறியபோது, “பாதுகாப்பு படை வீரர்களை எல்லையில் குவிப்பதால் சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

ட்ரம்ப் முடிவுக்கு மாகாண ஆளுநர்கள் வரவேற்பு தெரிவிக்கும் நிலையில், இதற்கு ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு அதிக செலவு ஆகும் என்றும், ஏற்கெனவே ஜார்ஜ் புஷ் அதிபர் காலத்தில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP