ட்ரம்ப் செய்தித் தொடர்பாளருக்கு சாப்பாடு கிடையாது! - ஹோட்டல் உரிமையாளர் அதிரடி

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்சுக்கு உணவு தர மறுத்து, உணவகத்தில் இருந்து வெளியேறக் கூறிய அதன் உரிமையாளருக்கு பாராட்டும், எதிர்ப்புமாக கிளம்பியுள்ளது.
 | 

ட்ரம்ப் செய்தித் தொடர்பாளருக்கு சாப்பாடு கிடையாது! - ஹோட்டல் உரிமையாளர் அதிரடி

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்சுக்கு உணவு தர மறுத்து, உணவகத்தில் இருந்து வெளியேறக் கூறிய அதன் உரிமையாளருக்கு பாராட்டும், எதிர்ப்புமாக கிளம்பியுள்ளது. 

அமெரிக்காவின் வெர்ஜீனியா லெக்ஸிங்டனில் உள்ள ரெட் ஹென் எனும் உணவகத்துக்குச் சென்ற சாரா சாண்டர்சிடம், அதிபர் ட்ரம்பிடம் பணியாற்றுவதைக் காரணம் காட்டி தங்களை வெளியேற்ற விரும்புகிறேன் என அதன் உரிமையாளர் ஸ்டெஃபானீ வில்கின்சன் கூறியுள்ளார். 
இதைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் அந்த உணவகத்துக்கு சென்றிருந்த சாரா, அமைதியாக வெளியேறிவிட்டார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "எமக்குப் பிடிக்காத நபர்களைக் கூட தாம் மரியாதையோடு நடத்திவருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்த உணவக உரிமையாளர் ஸ்டெஃபானீ, "அகதியாக வந்த குடியேறிகளிடம் அவர்களது குழந்தைகளைப் பிரிக்கும் ட்ரம்பின் கொள்கையை சாரா நியாயப்படுத்தி பேசி வருகிறார். இத்தகைய செயலில் ஈடுபடுபவருக்கு ஆதரவு தெரிவிப்பவரைக் கூட ஏற்க முடியாது.  தனது தொழில் நேர்மை, இரக்ககுணம், ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றைப் பின்பற்றுவதால், அதற்கு மாறான கொள்கையை நியாயப்படுத்துபவருக்கு தனது உணவகத்தில் இடமில்லை" என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் செய்தி தொடர்பாளரை மிகச் சாதாரண மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள லெக்ஸிங்டனில் உணவகம் வைத்திருக்கும் ஒருவர், இவ்வாறு நடத்தி இருப்பது நாகரீகமற்ற செயல் என்று ஸ்டெஃபானீக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே சமயம் அவரது துணிச்சலையும் நேர்மையையும் பாராட்டுவதாக, அகதிகள் விஷயத்தில் கொதிப்படைந்துள்ளவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP