ட்ரம்ப் பேச்சு: அமெரிக்க தூதரிடம் கண்டனம் தெரிவித்தது பாகிஸ்தான்

ஒசாமா பின் லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தந்து, அமெரிக்காவுக்கு துரோகம் செய்ததாக அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
 | 

ட்ரம்ப் பேச்சு: அமெரிக்க தூதரிடம் கண்டனம் தெரிவித்தது பாகிஸ்தான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, ஒசாமா பின் லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தனது, அமெரிக்காவுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபரான பிறகு, தீவிரவாதத்திற்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார். தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாகவும், ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் கொல்லப்பட்டார். பாகிஸ்தானுக்கு தெரியாமல் நடந்த இந்த ரகசிய ஆபரேஷனை தொடர்ந்து, பின் லேடனுக்கு பாகிஸ்தான் நீண்டநாட்களாக அடைக்கலம் கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, பாகிஸ்தானை கடுமையாக சாடியிருந்தார் ட்ரம்ப். "ஆனால் அமெரிக்கா தேடி வந்த முக்கிய தீவிரவாதி பாகிஸ்தானில் ஒரு சிறப்பான மேன்ஷனில் குடியிருந்து வந்துள்ளான். இந்த நிரையில், நாம் பாகிஸ்தானுக்கு ஒரு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர்கள் கொடுத்து வருகிறோம். நான் வந்ததன் பிறகு அதை நிறுத்திவிட்டேன்" என்று கூறினார். இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

"அமெரிக்காவின் தோல்விகளுக்கு பாகிஸ்தானை பலியாடாக்ககே கூடாது. ஆப்கான் போரில் அமெரிக்கா தோற்றதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். முன்பிருந்ததை விட, தற்போது அந்நாட்டில் தலிபான் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கூட இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபடவில்லை. ஆனால், பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக அந்த போரில் இறங்கியது. பாகிஸ்தான் வீரர்கள் 75 பேர் உயிரிழந்துள்ளனர். 123 பில்லியன் டாலர்கள் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து ட்ரமப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP