சீன மாடல் ஃபோனுக்கு ட்ரம்ப் மாற வேண்டும்: சீனா கலாய்ப்பு

சீனாவும் ரஷ்யாவும் தங்களது அதிபர் ட்ரம்ப்பின் செல் ஃபோனை ஒட்டுக்கேட்பதாக அமெரிக்கா கூறும் புகாரை கலாய்க்கும் விதமாக ட்ரம்ப்-ஐ சீன மாடல் ஃபோன் வாங்க அந்நாடு பதில் கூறியுள்ளது.
 | 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆப்பிள் ஐபோன் அழைப்புகளை சீனா மற்றும் ரஷ்யா ஒட்டுகேட்பதாக சமீபத்தில் அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்து வெளியிட்டுள்ளது. இவ்வாறே அவரது குடியரசுக் கட்சியும் கூறிவருகிறது. இந்த நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா ட்ரம்ப்-ஐ கலாய்த்து, ஆப்பிள் ஐஃபோனுக்கு பதிலாக சீனாவில் தயாரிக்கப்படும் செல்ஃபோன்களை பயன்படுத்துமாறு சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இதனிடையே இது குறித்து செய்தியாளர் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த ட்ரம்ப், இந்த செய்தியை எழுதியவருக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கொடுக்கலாம், முதலில் நான் செல்ஃபோனை பயன்படுத்துவதே குறைவு தான் என்று அவர் கூறியுள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP