ரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணை... எதிர்கொள்ள தயார் என்கிறார் டிரம்ப்!

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு- விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் டிரம்ப்
 | 

ரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணை... எதிர்கொள்ள தயார் என்கிறார் டிரம்ப்!


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை நேரில் எதிர்கொள்ளப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் ஹிலாரியின் உடல்நலம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவின. இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. அதிபர் தேர்தலில் ஹிலாரியை தோற்கடிக்க ரஷ்ய அமைப்புகள் முயற்சித்ததாக ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதை முடிக்க நான் விரும்புகிறேன். நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர், நேர்மையாக விசாரணை நடத்துவார் என நினைக்கிறேன். விசாரணை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியத்தான் போகிறது'' என்றார்.

முன்னதாக தாம் விசாரிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், இது தமக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை என்றும் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP