ட்ரம்ப் - ரஷ்யா தொடர்பு? விசாரணை அறிக்கை தாக்கல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு குறித்து விசாரணை நடத்திவந்த சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லர், தனது விசாரணை அறிக்கையை அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலிடம் தாக்கல் செய்துள்ளார்
 | 

ட்ரம்ப் - ரஷ்யா தொடர்பு? விசாரணை அறிக்கை தாக்கல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு குறித்து விசாரணை நடத்திவந்த சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லர், தனது விசாரணை அறிக்கையை அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலிடம் தாக்கல் செய்துள்ளார்.

2016 அமெரிக்க தேர்தலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு, ரஷ்ய அரசு உதவி புரிந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஹேக்கர்கள் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும், ரஷ்ய விஷமிகள் அமெரிக்க மக்கள் கருத்தை திசைதிருப்ப முயற்சி செய்து, ட்ரம்ப்புக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து விசாரிக்க சிறப்பு கமிட்டியை அமைத்தார் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன். 

கடந்த இரண்டு வருடங்களாக இந்த விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் ட்ரம்புக்கு நெருக்கமான பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் சொந்த விவகாரங்களுக்கான வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் கோஹன், மற்றும் அவரின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவர் பால் மேனாபோர்ட் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று தனது குழு அறிக்கையை அட்டர்னி ஜெனரலிடம் ராபர்ட் முல்லர் தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை அறிக்கை குறித்த முக்கிய தகவல்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தான் விரைவில் தெரிவிக்க உள்ளதாக அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் கூறியிருந்தார்.

முல்லரின் விசாரணை முழுக்க முழுக்க பொய்யானது, என்றும் தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் செய்யும் சதி என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP