ஜூலை 16ம் தேதி ட்ரம்ப் - புடின் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அடுத்த மாதம் பின்லாந்தில் சந்தித்து உச்சகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார்.
 | 

ஜூலை 16ம் தேதி ட்ரம்ப் - புடின் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அடுத்த மாதம் பின்லாந்தில் சந்தித்து உச்சகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார். 

அடுத்த மாதம் 16ம் தேதி, பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஏற்கனவே, ரஷ்யா, வடகொரியா போன்ற முன்னாள் எதிரி நாடுகளுடன் நெருக்கமான போக்கை கடைபிடித்து வரும் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகள், இந்தியா சீனா போன்ற நட்பு நாடுகளின் இறக்குமதி மீது புதிய வரிகள் விதித்து அனைவரையும் குழப்பி வருகிறார். 

முன்னாள் அதிபர் ஒபாமா விதித்த பொருளாதார தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை நீக்க புடின் முயற்சி எடுத்து வருகிறார். புடின் ஆணையில் ரஷ்ய ஹேக்கர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை சிதறடிக்க முயற்சிகள் எடுத்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த சந்திப்பில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பில், தீவிரவாதம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா மற்றும் கனடா அமைத்துள்ள நேட்டோ கூட்டணியையும் ட்ரம்ப் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது, ஐரோப்பிய தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டை அடுத்து சில தினங்களிலேயே ட்ரம்ப் புடினை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP