அகதிகளை தடுக்க 15,000 ராணுவ வீரர்களை அனுப்ப ட்ரம்ப் திட்டம்

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸில் இருந்து அமெரிக்காவுக்கு கேரவேன்களில் வரும் அகதிகளை தடுக்க, சுமார் 15,000 ராணுவ வீரர்களை தெற்கு எல்லையில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

அகதிகளை தடுக்க 15,000 ராணுவ வீரர்களை அனுப்ப ட்ரம்ப் திட்டம்

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸில் இருந்து அமெரிக்காவுக்கு கேரவேன்களில் வரும் அகதிகளை தடுக்க, சுமார் 15,000 ராணுவ வீரர்களை தெற்கு எல்லையில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நுழைவதை குறைக்க, குடியுரிமை சட்டங்களை தொடர்ந்து கடுமையாக மாற்றி வருகிறார் ட்ரம்ப். எல்லையில் சுவர் கட்டுவது துவங்கி, பிறப்பு குடியுரிமையை நீக்குவது வரை இவரது பல முடிவுகள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், ஹொண்டூராஸ் நாட்டில் இருந்து மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கேரவேன்களில் சென்று கொண்டிருக்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் தங்களது நாட்டில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து அவர்கள் கிளம்பியதாக கூறப்படுகிறது. சுமார் 7000 பேர் அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், எந்த ஆதாரமும் இல்லாமல், அகதிகள் என்ற போர்வையில் பல மோசமான ரவுடிகளும், குற்றவாளிகளும் வந்து கொண்டிருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இதுபற்றி ட்வீட் செய்துவரும் ட்ரம்ப், "வரும் அகதிகளை எல்லையிலேயே திருப்பு அனுப்புவோம்" என எச்சரித்தார். இதற்காக அந்த பகுதியின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள 2100 பாதுகாப்பு படையினருக்கு மேல், கூடுதலாக 5100 ராணுவ வீரர்களை அமெரிக்க ராணுவம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய ட்ரம்ப், அகதிகள் கூட்டத்தில் ரவுடிகள் இருக்கிறார்கள் என்பதற்கு தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லையென ஒப்புக்கொண்டார். ஆனால், சட்டவிரோதமாக வரும் யாருமே எல்லைக்குள் நுழைய முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். சுமார் 15,000 ராணுவ வீரர்கள் வரை அங்கு நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒபாமா, ஹிலாரி க்ளிண்டன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பிய ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அகதிகள் விவகாரத்தை காட்டி அதிலிருந்து திசைதிருப்ப ட்ரம்ப் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP