வடகொரிய அதிபரை சந்திக்கிறார் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 | 

வடகொரிய அதிபரை சந்திக்கிறார் ட்ரம்ப்

வடகொரிய அதிபரை சந்திக்கிறார் ட்ரம்ப்அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அமெரிக்காவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் விதமாக அணு ஆயூத சோதனைகளை வடகொரியா செய்து வந்தது. திடீரென மனம் மாறிய அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். மேலும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு பின் கொரிய தீபகற்பத்தில் நிலவிய பதற்றம் தணிந்தது. 

இந்நிலையில், கிம் ஜாங் உன் மற்றும் டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு விரைவில் நடக்க உள்ளது. இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனால் அதிகாரப்பூர்வமாக இடம் குறித்து தகவல் வரவில்லை. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபருடனான சந்திப்பு  இன்னும் ஓரிரு வாரங்களில் நடக்கும் என்று ட்ரம்ப் பொது நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP