வடகொரியா மீதான தடைகளை நீக்கினார் ட்ரம்ப்

வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்து இரண்டே நாட்களில், தடைகளை நீக்குவதாக அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 | 

வடகொரியா மீதான தடைகளை நீக்கினார் ட்ரம்ப்

வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்து இரண்டே நாட்களில், தடைகளை நீக்குவதாக அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அரசு அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த ஆண்டு அணு ஆயுதங்களை கைவிட தயாராக இருப்பதாக வடகொரியா கூறிய நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இரண்டாவது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

பொருளாதார தடைகளை நீக்காவிட்டால், அணு ஆயுதங்களை கைவிட முடியாது என வடகொரியா தெரிவித்த நிலையில், பேச்சுவார்த்தையில் இருந்து ட்ரம்ப் பாதியில் எழுந்து வந்தார். 

இந்த நிலையில், தொடர்ந்து அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட இருப்பதாக வடகொரியா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து, வடகொரியாவின் மீது இருக்கும் பொருளாதார தடைகளை நீக்குவதாக ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்தார். ஆனால், எந்தெந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன என இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

அதிபர் ட்ரம்ப்புக்கு வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னை பிடிக்கும். வடகொரியாவின் மீது இந்த தடைகள் தேவையில்லை" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளார் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP