பிப்ரவரி இறுதியில் ட்ரம்ப் - கிம் மீண்டும் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும், இரண்டாவது முறை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பு பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிட வேண்டுமென வலியுறுத்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தனது ஆயுதங்களை வடகொரியா விட்டுக் கொடுக்கும், என கிம் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், கிம்மை ட்ரம்ப் மீண்டும் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதன்படி, வடகொரிய பிரதிநிதி கிம் யோங்-சோல் வெள்ளை மாளிகைக்கு நேற்று வந்தார். அதிபர் கிம்மிடம் இருந்து கொண்டு வந்த ஒரு கடிதத்தை ட்ரம்ப்பிடம் அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, இரண்டாவது சந்திப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பு பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்றும், வியட்நாமில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் வெள்ளை மாளிகையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP