ட்ரம்ப் - கிம் பேச்சுவார்த்தை படுதோல்வி!

வியட்நாமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை பொருளாதார தடைகள் குறித்த கருத்துவேறுபாடால் பாதியிலேயே தோல்வி அடைந்தது.
 | 

ட்ரம்ப் - கிம் பேச்சுவார்த்தை படுதோல்வி!

வியட்நாமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை பொருளாதார தடைகள் குறித்த கருத்துவேறுபாடால் பாதியிலேயே தோல்வி அடைந்தது.

அமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ர்மப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணு ஆயுதங்களைக் கைவிட வடகொரியாவை அவர் வலியுறுத்தினார். அதற்காக கிம் ஒப்புக் கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் வடகொரியா தரப்பிலிருந்து அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், வியட்நாமில் இரண்டாவது உச்சிமாநாட்டில் ட்ரம்ப், கிம் ஜோங் உன்னை நேற்று சந்தித்தார். 2 நாட்கள் நடைபெற இருந்த இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களை வடகொரியா கைவிட வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்த திட்டமிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, பாதியில் எழுந்து சென்றார். அணு ஆயுதங்களை கிம் விட்டுக் கொடுக்க முன் வந்ததாகவும், அதற்கு பதில் அந்நாட்டின் மீதுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டுமெனவும் அவர் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், அதை செய்யமுடியாது எனக் கூறி, அங்கிருந்து ட்ரம்ப் எழுந்து சென்று விட்டார். "மொத்தமாக பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என கூறுகின்றனர். அது முடியாது. அதனால் எழுந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எனக்கும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோவுக்கும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இஷ்டம் இல்லை" என்று ட்ரம்ப் கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP