டிரம்ப்- கிம் ஜோங் சந்திப்பு; சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

சிங்கப்பூரில் வரும் 12ம் தேதி அதிபர்கள் டிரம்ப்- கிம் ஜோங் சந்திக்க இருப்பதையொட்டி, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 | 

டிரம்ப்- கிம் ஜோங் சந்திப்பு; சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

சிங்கப்பூரில் வரும் 12ம் தேதி அதிபர்கள் டிரம்ப்- கிம் ஜோங் சந்திக்க இருப்பதையொட்டி, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி வடகொரிய அதிபரை சந்திப்பேன் என டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து வடகொரிய பிரதிநிதிகளும் இதனை உறுதி செய்தனர். இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெறுவதையொட்டி, சிங்கப்பூரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் செண்டோசா தீவில் உள்ள புகழ்பெற்ற கேபெல்லா ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி சரியாக காலை 9 மணிக்கு சந்திக்க இருக்கின்றனர். பல நாட்டுத் தலைவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது இந்த ஹோட்டலில் தான் தங்குகின்றனர். பிரதமர் மோடியும் இங்கு தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டிரம்ப், கிம் ஜோங் ஆகிய இருவருமே தங்கள் தனிப்பட்ட பாதுகாவலர்களை உடன் அழைத்து வருகின்றனர். சிங்கப்பூரில் ஜூன் 11 முதல் 13 வரை விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து எந்த விமானமும் இயங்காது. அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும் விமானம் எதுவும் உள்ளே அனுமதிக்கப்படாது. 

தொடர்ந்து சந்திப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பெயிண்ட் வாங்க, விற்க, உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களுக்கு எதிரான வாசகங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படையைத் தவிர வேறு யாரும் ஆயுதம் கையில் வைத்திருக்கக்கூடாது. இதுபோன்ற விதிமுறைகளால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP