டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நேரம் அறிவிப்பு!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்கான நேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நேரம் அறிவிப்பு!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்கான நேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுத சோதனை நடத்தி வந்த வடகொரியா சமீபத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. அதன் முதற்கட்டமாக வடகொரிய - தென் கோரிய அதிபர்களின் சந்திப்பு நடந்தது. அதில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு உறுதியானது. வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் இருவரும் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டது. ஆனால் வடகொரியா, அணு ஆயுத சோதனைகளை முழுவதுமாக நிறுத்திக்கொள்ள மாட்டோம் என்ற பாணியில் மீண்டும் பேசியதால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

ஆனால்  சிறிது நாட்களுக்கு பிறகு, வடகொரிய அதிபரை நிச்சயம் சந்திப்பேன் என டிரம்ப் அறிவித்தார். இதை வடகொரியாவும் ஆமோதித்தது. நேற்று இரு நாட்டு அதிபர்களும் சந்திப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதன் பிறகு ஜூன் 12ல் அதிபர்கள் சந்திப்பு நேரம் குறித்து வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி , ஜூன் 12ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நிகழும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP