பிரதமர் மோடி போல் பேசிக்காட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை 'மிகவும் அழகான மனிதர்' என்று குறிப்பிட்டு அவரைப்போல் பேசிக்காட்டினார்.
 | 

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படாத நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரி 100% என்ற கணக்கில் விதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நேற்று(பிப்.27) வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வணிகக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், "பிரதமர் மோடி மிகச் சிறந்தவர். அவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் வாகனங்களுக்கு வரியை குறைப்பதாக கூறினார்.

தற்போது 100%லிருந்து 75% ஆக குறைப்பதாகவும், பின்னர் 50% ஆக குறைப்பதாகவும் அவர் மிக அழகாக கூறினார். ஆனால் இதுவரை அவர் வரிக்குறைப்பு செய்யவில்லை. இது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு இதனால் எந்த பலனும் இல்லை" என்றார். இதை பிரதமர் மோடியை போன்று தாழ்வான குரலில் அவர் பேசிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னதாக ஒருமுறை இதேபோல் அமெரிக்க ஊடகங்கள் முன்னிலையில் டிரம்ப் பிரதமர் மோடி போல் பேசியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP