அதிபருக்கான தகுதி இல்லாதவர் ட்ரம்ப்: முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு அதிபருக்கான தகுதி கிடையாது என முன்னாள் அமெரிக்க புலனாய்வுத்துறை தலைவர் ஜேம்ஸ் கோமி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 | 

அமெரிக்க புலனாய்வுத்துறை எஃப்.பி.ஐ-யின் தலைவராக பணிபுரிந்து வந்த ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தார். ரஷ்ய உளவாளிகள் மற்றும் ஹேக்கர்கள் ட்ரம்ப் தேர்தலில் வெல்ல உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஜேம்ஸ் கோமி அதுகுறித்து விசாரணை செய்து வந்தார். அந்த விசாரணையின் ஒரு அங்கமாக, ட்ரம்ப் தொடர்பான பலரை கோமி விசாரித்தார். 

அதில் கடுப்பான ட்ரம்ப், கோமியை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ட்ரம்புக்கு நாடு முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன்பின், சிறப்பு விசாரணை கமிஷன் உருவாக்கப்பட்டது. ட்ரம்ப் - ரஷ்யா தொடர்புகள் மட்டுமல்லாமல், கோமியை ட்ரம்ப் பணி நீக்கம் செய்து விசாரணையை தடுக்க முயற்சி செய்தாரா, என்பது தொடர்பாகவும் இந்த கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், கோமி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் ட்ரம்ப்பை மிக மோசமாக விமர்சித்து எழுதியுள்ளார். புத்தகம் தொடர்பாக ஒரு தொலைக்காட்சியில் பேட்டியளித்த கோமி, "ட்ரம்ப் அறிவுத்திறன் ரீதியாக அதிபர் பதவியில் இருக்க தகுதி இல்லாதவர் என பலர் கூறுகின்றனர். நான் அதை நம்பவில்லை. ஆனால், தார்மீக ரீதியாக அதிபராக இருக்க தகுதியற்றவர் ட்ரம்ப். பெண்களை கேவலமாக நடத்துவது, மக்களிடம் தொடர்ந்து பொய் சொல்வது இனவரியை தூண்டுபவர்களை ஆதரிப்பது, இதெல்லாம் ஒரு அதிபராக இருப்பவர் செய்யக் கூடிய காரியம் இல்லை" என கடுமையாக சாடினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP