தனக்கு எதிரான விசாரணை கமிஷன் தலைவரை நீக்க முயற்சித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிக்கு பின்னணியில் ரஷியா இருந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று எல்லாம் டிரம்ப் முழங்கினார். ஆனால், விசாரணை ஆணையத்தின் தலைவரை பதவியில் இருந்து நீக்க டிரம்ப் முயற்சித்த விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது.
 | 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக விசாரிக்க ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், ராபர்ட் முல்லரை அழைத்த வெள்ளை மாளிகை அதிகாரி, உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்... இல்லை என்றால் பதவியில் இருந்து தூக்கப்படுவீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார். முல்லரை பதவியில் இருந்து தூக்கும்படி வெள்ளை மாளிகையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதை டிரம்ப் மறுத்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் செய்தியை பொய் செய்தி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தால் அமெரிக்கவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP