சட்டவிரோதமாக பணம் கொடுக்க சொன்னது ட்ரம்ப் தான்: வக்கீல் வாக்குமூலம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரிலேயே, அவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்து அவர்கள் வாயை அடைக்க முயற்சி செய்ததாக ட்ரம்ப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 | 

சட்டவிரோதமாக பணம் கொடுக்க சொன்னது ட்ரம்ப் தான்: வக்கீல் வாக்குமூலம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரிலேயே, அவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்து அவர்கள் வாயை அடைக்க முயற்சி செய்ததாக ட்ரம்ப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தலின்போது, அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அப்போது, இரண்டு பெண்களுக்கு ட்ரம்ப்  தரப்பில் இருந்து பணம் கொடுத்து, அவர்கள் வாயை அடைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ட்ரம்ப் மீது சிறப்பு கமிட்டி நடத்தி வரும் விசாரணையில், ட்ரம்ப்புக்கு மிக நெருக்கமான, அவரது தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், குறிப்பிட்ட பெண்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தது தெரியவந்தது.

தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளருக்கு சாதகமாக நடைபெறும் எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் கோஹன் மீது கூட்டுச்சதி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தான் செய்தது தவறு என ஒப்புக் கொண்ட கோஹன், சிறப்பு விசாரணை கமிட்டியிடம் அப்ரூவராக மாறினார். ட்ரம்ப் குறித்த பல்வேறு உண்மைகளை அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தான் செய்த குற்றத்தில் இதுவரை ட்ரம்ப்பின் பங்கு இல்லை என்று கூறி வந்த கோஹன், தற்போது ட்ரம்ப்புக்கு தெரிந்தே தான் அதை செய்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பெண்களிடம் பணம் கொடுத்து அவர்கள் வாயை அடைக்க ட்ரம்ப் தன்னிடம் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது ட்ரம்ப் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்த முகாந்திரம் இருப்பதால் வெள்ளை மாளிகையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP