"சாக்கடை நாடுகளிலிருந்து வருகிறார்கள்" டிரம்ப் புதிய சர்ச்சை!

"சாக்கடை நாடுகளிலிருந்து வருகிறார்கள்" டிரம்ப் புதிய சர்ச்சை!
 | 

"சாக்கடை நாடுகளிலிருந்து வருகிறார்கள்" டிரம்ப் புதிய சர்ச்சை!


அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று வெள்ளை மாளிகையில் தனது கட்சியினரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சாக்கடை நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற வருகிறார்கள் என கூறியதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, டிரம்ப்புக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் எழும்பியுள்ளன.

தான் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதை தடுக்க, விதிகளை கடினமாக்கினார் டிரம்ப். 7 இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் யாரும் வர முடியாத படி பயண தடை விதித்தும் உத்தரவிட்டார். ஆனால், டிரம்ப் எடுக்கும் இதுபோன்ற பல முயற்சிகள், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என குறிப்பிட்டு, அமெரிக்க மத்திய நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வருகின்றன.

இதனால், நீதிமன்றங்கள் மீதும், குடியேறுபவர்கள் மீதும் கடுப்பில் இருக்கும் டிரம்ப், நேற்று சில அதிகாரிகளிடம் குடியுரிமை குறித்து புதிய சட்டம் உருவாக்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். சில ஆப்பிரிக்க நாடுகளையும், எல் சால்வடார், ஹெய்டி போன்ற வட அமெரிக்க நாடுகளையும் குறிப்பிட்டு, "இதுபோன்ற சாக்கடை நாடுகளில் இருந்து ஏன் அமெரிக்காவுக்குள் வருகிறார்கள்" என டிரம்ப் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நாடுகள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் என டிரம்ப்பின் மீது கடும் கண்டனங்கள் எழுப்பியுள்ளன.

அதிபர் தேர்தலில் நிற்கும்போது "மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் விற்பவர்களும், குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் தான் வருகின்றனர்" என கூறி டிரம்ப் சர்ச்சையை கிளப்பினார். ஒபாமா அதிபராக இருந்தபோதும், அவரை ஆப்பிரிக்காவில் பிறந்தவர் என டிரம்ப் விமர்சனம் செய்தார். ஒபாமா தனது பிறப்பு சான்றிதழை காட்டவேண்டும் என்றும் கூறினார். அமெரிக்காவில் பிறந்த ஒபாமா, டிரம்ப் போன்றவர்கள் கிளப்பிய இந்த வினோத சர்ச்சையை தொடர்ந்து, தனது பிறப்பு சான்றிதழை காட்டி, தான் அமெரிக்காவில் பிறந்தவர் என தெளிவு படுத்தினார். அப்போது டிரம்ப், இனவெறி பிடித்தவர் என்றும், கறுப்பினத்தவர் என்ற ஒரே காரணத்தால் ஒபாமாவை டிரம்ப் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் என கூறுவதாக கண்டனங்கள் எழுந்தன.

ஏற்கனவே இதுபோல பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளதால், சமீபத்திய 'சாக்கடை நாடுகள்' பேச்சை தொடர்ந்து, டிரம்ப் இனவெறி பிடித்தவர் என்று சி.என்.என் போன்ற அமெரிக்க ஊடகங்களும், முக்கிய தலைவர்களும் வெளிப்படையாகவே அவரை விமர்சித்து வருகின்றனர்.

மெக்சிகோ நாட்டின் முன்னாள் அதிபர் விசேன்டே பாக்ஸ், "டிரம்ப்பின் வாய் தான் உலகிலேயே மிகப்பெரிய சாக்கடை" என ட்விட்டரில் எழுதி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP