ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க டிரம்ப் தயக்கம்

ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க டிரம்ப் தயக்கம்
 | 

ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க டிரம்ப் தயக்கம்

ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க டிரம்ப் தயக்கம்

ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய மசோதாவை நடைமுறைப்படுத்தாமல், அதிபர் டொனால்ட் டிரம்ப் காலம் தாழ்த்தி வருகிறார். இது எதிர்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப்பின் எதிர்கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்யா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஹேக்கர்கள் மூலம், ஹிலாரி மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகளின் ஈ-மெயில்கள் ஹேக் செய்யப்பட்டு, அவை வெளியிடப்பட்டன. இது அவரது தோல்வியில் பெரும் பங்கு வகித்தது. 

இந்நிலையில், ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளுடன் டிரம்ப்பின் தேர்தல் அதிகாரிகள் கூட்டு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசேஷ கமிஷன் ஒன்று விசாரணை நடத்தி வருகிறது. தேர்தலில் குறுக்கிட்டதற்காக, தான் பதவியிறங்கும் முன், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார் முன்னாள் அதிபர் ஒபாமா. இந்த தடைகள் ரஷ்யா அதிபர் புடினை கடுமையாக கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம் சேர்ந்து ரஷ்யா மீது புதிய பொருளதார தடைகளை விதிக்க கடந்த ஆண்டு மசோதா ஒன்றை நிறைவேற்றயது. நாடாளுமன்ற செனட் சபையில், ரஷ்யாவுக்கு எதிரான இந்த மசோதா 98-2 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், இந்த பொருளாதார தடைகளை நடைமுறைக்கு கொண்டு வராமல் டிரம்ப் காலம் தாழ்த்தி வருகிறார். தேர்தலில் வெல்வதற்காக ரஷ்யாவுடன் டிரம்ப் கூட்டணி வைத்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரின் இந்த செயல் மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

டிரம்ப் தரப்பில், "ஏற்கனவே ரஷ்யா மீது பல்வேறு தடைகள் உள்ளன. அதனால் இது தேவையில்லை" என கூறியுள்ளனர். அதிபர் புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர்களை குறிவைத்து இந்த தடைகள் விதிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் டிரம்ப் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP