என்னை ஆள் வைத்து மிரட்டினார் ட்ரம்ப்: ஆபாச நடிகை பகிரங்க குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விவகாரம் பற்றி, ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அளித்த பேட்டி நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில், ட்ரம்ப்புடனான தனது உறவு பற்றி பேசிய டேனியல்ஸ், ட்ரம்ப் தரப்பில் ஒரு மர்ம நபர் தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
 | 

என்னை ஆள் வைத்து மிரட்டினார் ட்ரம்ப்: ஆபாச நடிகை பகிரங்க குற்றச்சாட்டு

என்னை ஆள் வைத்து மிரட்டினார் ட்ரம்ப்: ஆபாச நடிகை பகிரங்க குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விவகாரம் பற்றி, ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அளித்த பேட்டி நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில், ட்ரம்ப்புடனான தனது உறவு பற்றி பேசிய டேனியல்ஸ், ட்ரம்ப் தரப்பில் ஒரு மர்ம நபர் தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக 2006ம் ஆண்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியா கர்ப்பமாக இருந்தபோது, ட்ரம்ப் தன்னுடன் உறவு கொண்டதாக டேனியல்ஸ் ஒரு வாரஇதழில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி 2011ம் ஆண்டு பதிப்பானது. அதன்பின்னர், 2016ம் ஆண்டு ட்ரம்ப் தேர்தலில் நின்றபோது, டேனியல்ஸ் இதுகுறித்து பேச மறுத்துவிட்டார். அவருக்கு 1,30,000 டாலர்கள் கொடுத்து NDA எனப்படும் ஒப்பந்தத்தை ட்ரம்ப் போட்டதாகவும், அதனால் தான் அவர் பேச மறுப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்த விவகாரத்தத்தில் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கல் கோஹன், டேனியல்ஸுடன் அந்த ஒப்பந்தத்தை தானே போட்டதாகவும்  1,30,000 டாலர்கள் தனது சொந்த காசில் இருந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார். ட்ரம்ப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, தான் கையெழுத்திட்ட ஒப்பந்தம் செல்லாது என ஸ்டார்மி கூறினார். இந்நிலையில், ட்ரம்ப்புடனான உறவு பற்றி நேற்று தொலைக்காட்சியில் பேசிய அவர், 2006ம் ஆண்டு, இருவரும் உறவு கொண்டதாக தெரிவித்தார். 

"தேர்தல் நேரத்தில் இந்த விஷயத்தை பற்றி நான் யாரிடமும் பேசிவிடக் கூடாது என்ற காரணத்தால் அந்த பணத்தை என்னிடம் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினர். ஆனால், அந்த ஒப்பந்தம் செல்லாது. 2011ம் ஆண்டு இந்த விவகாரத்தில் என்னை ஒருவர் மிரட்டினார். ட்ரம்ப் பற்றி நான் யாரிடமும் பேசக்கூடாது, பேசினால் என குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்" என்றார் டேனியல்ஸ். 

ட்ரம்ப் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை மிரட்டியதாக டேனியல்ஸ் கூறுவதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும், அவரை பேசவிடாமல் செய்ய 2016ம் ஆண்டு ட்ரம்ப்பின் வழக்கறிஞர் கோஹன் கொடுத்த 1,30,000 டாலர்கள் தற்போது விசாரணை அதிகாரிகளின் பார்வையில் உள்ளது. அப்போது வேட்பாளராக இருந்த ட்ரம்ப், தேர்தல் குறித்து செய்த அனைத்து செலவுகளையும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்நிலையில், தனது தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க டேனியல்ஸுக்கு ட்ரம்ப் கொடுத்த பணம், தேர்தல் செலவுகளாக கருதப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏற்கனவே ட்ரம்ப்பின் தேர்தல் அதிகாரிகள் ரஷ்யாவுடன் வைத்திருந்த தொடர்புகளை சிறப்பு கமிஷன் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், இது அவருக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆரம்பம் முதலே ஸ்டார்மி டேனியல்ஸுடன் தனக்கு எந்த உறவும் கிடையாது என ட்ரம்ப் கூறிவருகிறார். அதன்பின், டேனியல்ஸுடன் அவர் போட்ட ஒப்பந்தம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP