பாரிசில் ட்ரம்ப் - புடின் மீண்டும் சந்திப்பு!

ரஷ்யாவுடனான இருதரப்பு அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிய நிலையில், அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அடுத்த மாதம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 | 

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வருகிறார். பல தருணங்களில் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டி  வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா ரஷ்யா இடையிலான இருதரப்பு அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா பலமுறை மீறிவிட்டதாக கூறிய ட்ரம்ப், இனிமேல், குறிப்பிட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடும் என்றும் கூறினார்.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் போல்ட்டன் ரஷ்யா சென்றார். புடினை சந்தித்து, ட்ரம்ப்பின் முடிவை பற்றி அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, ட்ரம்ப் - புடின் இருவரின் அடுத்த சந்திப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்த மாதம் 11ம் தேதி, பாரிஸில் நடைபெறும் முதலாம் உலகப்போர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரு நாட்டு தலைவர்களும் வரும்போது, இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும், முக்கிய பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP