'நளதமயந்தி' பாணியில் காமெடி செய்த ட்ரம்ப்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விமானத்தில் ஏறிச் செல்லும் போது, அவரது ஷூவில், டாய்லெட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

'நளதமயந்தி' பாணியில் காமெடி செய்த ட்ரம்ப்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விமானத்தில் ஏறிச் செல்லும் போது, அவரது ஷூவில், டாய்லெட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சர்ச்சைகள் முழு உருவமாக வலம் வருபவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதிபர் என்றாலே ஊடகங்களின் 24 மணி நேர கண்காணிப்பில் வாழ வேண்டும். அதிலும் தினசரி சர்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டர் முதல் மாநாடு வரை சொல்லி பிரளயத்தை ஏற்படுத்தி வரும் ட்ரம்ப்பை, நம்பியே அமெரிக்காவில் பல ஊடகங்கள் தொழில் நடத்தி வருகின்றன. 

எப்போதும் தனது பேச்சுக்களுக்கும், சில நேரம் உளறல்களுக்கும் பேர் போன ட்ரம்ப், இந்தமுறை ஊடகங்களின் கண்களில் வேறு விதமாக சிக்கியுள்ளார். ஏர் போர்ஸ் ஒன் என்ற அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக விமானத்தில் அவர் ஏறிச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவில், ட்ரம்ப்பின் ஷூவின் அடியில் 'டாய்லெட் பேப்பர்' ஒட்டிக் கொண்டிருப்பது தெரிகிறது. அதை அறியாமல், ட்ரம்ப் விமானத்தில் ஏறி கம்பீரமாக நின்று பொதுமக்களுக்கு போஸ் கொடுக்கிறார்.

'நளதமயந்தி' படத்தில் மாதவன், மேற்கத்திய கலாச்சாரம் தெரியாமல், விமானத்தின் கழிப்பறையில், டாய்லெட் பேப்பரை அரைகுறையாக பயன்படுத்தி, அதை இழுத்துக்கொண்டே வெளியே வருவார். அதுபோல ட்ரம்ப்பின் வீடியோ அமைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

"வெள்ளை மாளிகையில் இருந்து விமானம் ஏறும் வரை, ட்ரம்ப்பை சுற்றி நிற்கும் நூற்றுக்கணக்கான பாதுகாவலர்களும், அதிகாரிகளும் இதை எப்படி பார்க்காமல் போனார்கள்?", "உண்மையிலேயே ட்ரம்ப்பை சுற்றி உள்ள அனைவருமே அவரை வெறுக்கிறார்கள் போல", "ட்ரம்ப் 5 வயது சிறுவன் போல என சொல்வது உண்மை தான். சிறுவன் போல தான் டாய்லெட் பேப்பரை பயன்படுத்துகிறார்" என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP