அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் டில்லர்சனை நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று தனது வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
 | 

டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு, தனது வெளியுறவுத்துறை செயலாளராக தொழிலதிபர் ரெக்ஸ் டில்லரசனை நியமித்தார். ரஷ்ய அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமான டில்லர்சன், இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது  பல புருவங்களை உயர்த்தியது.

கடந்த சில மாதங்களாக டில்லர்சனுக்கும் டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்துள்ளது. டிரம்ப்பை 'அடி முட்டாள்' என டில்லர்சன் திட்டியதாக செய்தி வெளியானது. 

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா குறுக்கிடுவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டி வரும் நிலையில், ரஷ்யா மீது டிரம்ப் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கடந்த வாரம், பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நடந்த கொலை முயற்சி குறித்து எழுந்த சர்ச்சையில், பிரிட்டன் அரசு நேற்று ரஷ்யா மீது குற்றம் சாட்டியது. ரெக்ஸ் டில்லர்சனும், ரஷ்யா இந்த கொலை முயற்சிக்கு காரணமாக இருக்கலாம் என கூறினார். ஆனால், டிரம்ப், ரஷ்யா மீது குற்றம் சாட்ட மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் டில்லர்சனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே பெரிய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இன்று டில்லர்சன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அவருக்கு பதில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ-வின் தலைவர் மைக் பாம்பேயோ வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP