ரஷ்யாவுடன் ட்ரம்ப் கூட்டுசதி செய்யவில்லை: விசாரணை அறிக்கை

ரஷ்யாவுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தேர்தல் குழுவுக்கும் இடையே இருந்த தொடர்புகள் குறித்து நடைபெற்று வந்த விசாரணையில், அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
 | 

ரஷ்யாவுடன் ட்ரம்ப் கூட்டுசதி செய்யவில்லை: விசாரணை அறிக்கை

ரஷ்யாவுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தேர்தல் குழுவுக்கும் இடையே இருந்த தொடர்புகள் குறித்து நடைபெற்று வந்த விசாரணையில், அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. ட்ரம்ப்பின் தேர்தல் குழுவில் பணியாற்றிய பலர், ரஷ்ய ஹேக்கர்களுடனும், ரஷ்ய உளவாளிகளுடனும் கூட்டு சேர்ந்து சதி செய்ததாகவும், எதிர் வேட்பாளர் ஹிலாரிக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டது. முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ராபர்ட் முல்லர் தலைமையில், இந்த ஆணையம் செயல்பட்டு வந்தது.

இரண்டு ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு, முல்லர் தனது ரகசிய அறிக்கையை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பாரிடம் வழங்கினார். அந்த அறிக்கையில், ட்ரம்ப்பின் தேர்தல் குழுவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே, எந்த தொடர்பும் இல்லை என்று முல்லர் கூறியுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மேலும், எஃப்.பி.ஐ-யின் விசாரணையில் குறுக்கிட்டதாக ட்ரம்ப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை, என்றும் பார் கூறினார். ஆனால், முல்லரின் விசாரணை அறிக்கையை முழுவதும் உடனடியாக வெளியிட முடியாது என்று கூறியுள்ளார். 

முல்லரின் விசாரணையை முடக்க ட்ரம்ப் பலமுறை முயற்சித்த நிலையில், முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸை நீக்கி, வில்லியம் பாரை பணியில் அமர்த்தினார். அட்டர்னி ஜெனரல் ஆவதற்கு முன்னர், முல்லரின் விசாரணை குறித்து வில்லியம் பார் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதனால், முல்லரின் விசாரணை அறிக்கையை முழுவதுமாக வெளியிட வேண்டும், என்று எதிர்க்கட்சிகள் அட்டர்னி ஜெனரலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP