டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு எங்கே, எப்போது தெரியுமா?

வரலாற்றில் மைல்கல்லாக கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடக்க இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
 | 

டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு எங்கே, எப்போது தெரியுமா?

டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு எங்கே, எப்போது தெரியுமா?

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடக்க இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உலகையே அதிர வைத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பல்வேறு கண்டனங்களை தெரிவித்தது. இருந்தும் வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை நடத்தியதால் வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இவ்வாறாக கொரிய தீபகற்பத்தில் போர் சூளும் அபாயம் ஏற்பட்ட நிலையில், வலராற்றில் ஒருஅதிர்ச்சிகர நிகழ்வாக வடகொரியா-தென் கொரியா அதிபர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்த பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மேலும், அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் எதுவும் இனி நடைபெறாது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். இதனால் அனைத்து உலக நாடுகளும் மகிழ்ச்சியில் திளைத்தன.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்ததோடு, இந்த அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றார். தொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்ததையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

அதன்படி, அந்த சந்திப்பு எங்கே? எப்போது? நிகழும் என்பது குறித்து தென்கொரிய செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.  டெனால்டு டிரம்ப் ஜூன் 8ம் தேதி கனடாவில் நடக்க உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் ஜூன் 9ம் தேதி சிங்கப்பூரில் நடக்க உள்ள மாநாட்டில் கலந்து கொள்கிறார். அந்த மாநாட்டின் போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்கா-வடகொரியாவின் இந்த சந்திப்பும் உலக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP